இந்திய அஞ்சல் துறையில் கிராமின் தாக் சேவக் (GDS) பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள அஞ்சல் நிலையங்களில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் கிராமின் தாக் சேவக் (Gramin Dak Sevaks) ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
விண்ணப்பிக்கும் தகுதிகள்: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: கிளை போஸ்ட் மாஸ்டர் பணிக்கு 12,000 - 29,380 வரை சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், மேலும் அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
எஸ்.சி. பிரிவினருக்கு 5 வருடங்கள், எஸ்.டி. பிரிவினருக்கு 3 வருடங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு பிரிவுக்கு ஏற்று 10 முதல் 15 வருடங்கள் வரை வயது வரம்பில் தளர்வு உள்ளது.
விண்ணப்பிக்கத் தொடங்கும் தேதி: 10.02.2025
விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.03.2025
இந்த வாய்ப்பை வாய்ப்பை அனைவரும் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு தபால் துறை சார்பாக அறிவிக்கப்படுகிறது